Monday, May 12, 2008

ஒன்றில் இரண்டு கவிதை

1.
சுடும் சூரியனாய், குளிரும் சந்திரனாய்..
கொஞ்சம் கூட சோம்பல் அறியாத
ஒரு மனம் வேண்டும் எனக்கு, சூத்திரம் சொல்லுங்களேன் ப்ளீஸ்!
சேமித்து கொண்டே இருக்கிறேன் என்னுடைய நினைவலைகளை...
சூம்பிகொண்டு விடுகிறது.. என்னுடைய மனம்...
------------------------------------------------------------

2.

சிகரங்கள் தொடாத சிறகுகளாய்..
சிந்தனைகள்.. சிதறிக்கொண்டே இருக்கிறது...

வருடி கொடுத்தென் காயபட்ட அந்த சிறகுகளை..
சிகரம், தொடுவது... வெற்றியன்று...
வான் வெளியே .. பறந்திருந்து பூமி பார்ப்பதும் அதுவே...

சிந்தனையின் ஆணி வேராய் மனம்...