காதல் பற்றி நான் என்றோ எழுதிய குறிப்பு!!!
முற்று பெறாத இன்னொரு கட்டுரை...
இப்படியே இருந்து விட்டு போகட்டும்...
முடிந்த விஷயங்களை விட முடியாத... முற்று பெறாத காதல் கதைகள் தான்
மிக அதிகம்.. அதோடு இதுவ்ம் ஒன்றாய்!!!
-------------------------------------------------------------------------------------
இன்று காதலர் தினம்....
உலகமே போட்டி போட்டுகொண்டு ஒரு புத்தகம், ஒருசேனல் என்று விடாமல், போட்டி போட்டு கொண்டு, காதல் சேவை பரப்பி கொண்டு இருக்கின்றன
பொய்த்து போன காதல், புளித்து போன காதல், சிறப்பான காதல், கவிதையான காதல் என்று அப்பப்பா, காதலால் நிரம்பி வழிந்து, கசிந்து கொண்டே இருக்கிறது தினம்.
அது சரி ; என்னுடைய காதல் என்ன என்று, ஒரு சின்ன யோசனை..
காதல் என்பது :
காதல் ஒரு குறிப்பிட்ட மனிதர்கள் மீதோ, வட்டத்தின் மீதோ , இல்லை அதையும், தாண்டிய
அன்பு என்று கொள்வோம்..
அட அடா ; நீ பிரபஞ்சத்தின் காதலியா என்று கிண்டலடிக்காதீர்!!!