Friday, March 21, 2008

சூரியக்குடையின் கீழ் பனித்துளிகளின் அணிவகுப்பு

மெல்லிய பூவின் அதிர்வும்...
உறக்கத்தில் புன்னகைக்கும் குழந்தையின்
சிரிப்பும்...
ஒன்றாய் இருக்கின்றது பல சமயம்!!!
சி்ல்லென்று கன்னத்தை உரசும்
இரயில் கம்பி,...
சிநேகித்து, சுகமாய் மறக்க தோதாய்
கிடைக்கும் "இரயில்"
சந்திப்புகள்.!
சவரம் செய்யாத கணவனின்,
கன்ன இழைப்பு,
கொஞ்சமாய் கோபித்தலும்,
நிறய்ய அன்புமாய் கிடந்து வழியும் நெஞ்சம்!!!

இப்படி குட்டி குட்டியாய் விஷயங்கள் மூட்டை கட்டி
உறங்கும் மனதின்
மூலையில்......!!!!


L

No comments: