பழுத்த இலை உதிர்ந்தால், உன் காலம் முடிந்தது சரி, என்று...
அனுபவ பார்வை, பார்க்க தெரிந்தது எனக்கு, ஆனால்,
உன் இழப்பை எப்படி பார்ப்பது என்று தெரியவில்லை.. விதி எனவா?, இல்லை இது இப்படித்தான் என பக்குவ படவா?
உதிக்கும் முன்னரே, உதிர நீ ஏன் முடிவெடுத்தாய், நான் அறியேன்....
முதலில் வலித்தது, பின்னர் வருத்தியது...இப்பொழுதும், ஒர் வெற்றிடம் என்னுள்..
உதரம், காலி பானையாய்.. நீ இல்லாத வெறும் மனையாய்..
நீ இல்லை, உன்னை பற்றிய, கனவுகளும், கற்பனையுமே எச்சமாய்..
என்னுள், உன் நினைவுகளுமே மிச்சமாய்..
இது, மறக்கும், காலம் என்ற மருந்து இந்த இழப்பிற்க்கும், களிம்பு பூசும்..
குழந்தாய்.....
உன்னை, நான் கவனியாது இருந்தெனென்றால், அன்னை என்னை மன்னித்து விடு.. மெள்ள மெள்ள இக் கசப்பை, கழித்து விடு...
உன்னொடு நான் பேசிய காலங்கள், நாம் சிரித்தோம் என எண்ணி நான் கவிதைத்த காலங்கள்... அழகானவை, அவை என்றுமே உனக்கானவை...
அழிய வேண்டாம் அவை...உன் நினவாய் இருக்கட்டும் நெஞ்சின் ஒர் மூலையில்.. உனக்கான உன் அறையில்..
70 நாட்களெனும் சரி, என்னுள் வந்தாய் உயிரே அதற்க்கு நன்றி..
அதை புரிய வைத்த நட்பிற்க்கும், அன்பிற்க்கும் நன்றி...
No comments:
Post a Comment