ஆளுயுரமாய்... அன்புக்கு அடையாளமாய் உன் உருவம்.
யோக நித்திரையில் வீற்றிருக்கிறாய் கம்பீரமாய்..
உனக்குள்ளே இறைத்தன்மை கண்டு.. கை கூப்பி நான்..
காண்பதென்ன?..
என் அகத்தே விரியும் ஒர் கற்பனை காட்சி..
சாந்தம் தவழும் உன் கண்களை தாண்டி..சில மங்கி கிடக்கும் கண்ணீர் துளிகளின் சாயல்
புன்னகை தளும்பும்.. உதடுகளில்..
எங்கோ.. புதைந்த சில வார்த்தைகள் மட்டும் தேடுகிறேன் நான்..
யோகம் கலைந்து என் விழி பிடித்து என்னை உன் நினைவுகளின் நிரல்களில் உலாவ செய்கிறாய்...
ஒர் இரவு..உன் விதி வழி நீ செல்ல நேரிட்ட இரவு..
உன் வெப்பம் நீங்கா மெத்தையில்.. யசோதராவிற்க்காக நீ விட்டு சென்ற கண்ணீர் துளி..
விழுந்து காய்ந்த கரை மட்டும் உன்னை இன்னும் இடை விடாமல் துரத்தியபடி, பிண்ட் தொடர்கிரது பல இரவுகளாய்
இராகுலன், உன் உயிர் நனைய செய்யும் இன்னோர் உயிர்!!
அவனோடு முகம் புதைத்து.. முத்த மழை பொழிந்து.. விளையாடாத விசும்பல்கள் -கனமாய், கனாவாய் உன் இமை அழுத்தும்..
வானவில் பிம்பமாய்.. பல உலகங்கள்.. அடுக்கடுக்காய்.. உன் பத்மாசனமிட்ட தவ்க்கோலம் முன் மறைந்து போனாலும்..
உன் உள்ளே உறைந்து, உலுக்கும் ஒர் உண்மை... உன்னை பிரிந்து இவர்கள் விட்ட வேதனை பெருமூச்சு!
வடுவாய் சுமந்து -வலி தீர்ந்த பின்பும், தடயமாய் உன் மனத்தில்.
கற்பனை கலைந்து நான்,
உன் பிரும்மாண்ட சிலை ஏறி..உன் கன்னம் தடவி. இதுவும் கடந்து போகும், உன் வேதனை கரைந்து போகும் என,
சொல்ல விழைகிறேன்..
காக்கி சட்டை காவல்காரன், என்னை தடுத்தபடி..
என் அன்பு அறிந்து நீ, அழகாய் புன்னகைக்கிறாய்
புத்தனுக்கு ஆறுதலா என்று சிரிக்கிறாய்?
No comments:
Post a Comment