Tuesday, September 7, 2010

முரண்

கண்ணாடிக்குள் இரு முகம் போல் எனக்குள்ளே
சந்தோஷ கேணி வற்றாது ஊற்ற -சோக கனல் அடங்காது..வீச!
என்னதிது... ஏனிந்த முரண் என்னுள்..

என்ன வாழ்க்கை வேள்வி இது? யார் எனக்கிட்ட சாபம்... என்ன குழப்பம் என்னுள்?
யாரொடித்தார் என் சிறகை...

இன்றென்ன புதிய மாற்றம்... சிறகு மறுபடி முளைத்தது எங்கனம்?...
எப்படி மனதுள் சிரிப்பு மத்தாப்பூ பூக்கிறது...

ஒரு நாள் வெறுப்பு, மறு நாள், அன்பு...
இதென்ன நான் பைத்தியம் என்பதின் அறிகுறியா?

என் முண்டாசு கவியும், இந்த கூட்டத்தில் சேர்வானோ?
நான் ஏன் இப்படி கிடந்து அல்லாடுகிறேன்..

மாட்டிகொண்டேன் எந்த சக்கரத்தில் நான்?

தத்தக்கா புத்தக்கா என்று நடக்கும் குட்டி குழந்தை கண்டு விரியும் மனம்...
கையில் தடியும் ,துணைக்கு தனிமையுமாய்.. நடக்கும் முதியவரை காண்கையில்
சோம்பி விடுகிறது...

வாழ்க்கயே முரண்தானோ?

இப்படி போட்டு, அப்படி போட்டு, இறைவன் ஆடும் விளையாட்டுதானோ?...


இந்த தேடலும் என்னுள்ளே தொடரும் ..

மற்றபடி... உலகம் சகிக்கும்படிதான் இருக்கிறது..

நாளை மறுபடியும் வெறுத்து போகலாம்.. இருள்தான் இனி எங்கும் என்று தோன்றலாம்.

அது வரைக்கும், என்னோடு கை கோர்த்திடுங்கள்.
புன்னகை பூ விதைத்திடுங்கள் உங்களை கடந்து போகும் எல்லோருக்கும்..

1 comment:

Jammy said...

Naanum varugiren... en nilamayum athu thaan :)