நீ யாரென நான் வினவினேன்..
மரணம் என்றான்
பயங்கரமான இருளாய் இருப்பானென்று எண்ணினேன்..
கோரமான முகம் அவனதென்று என் முன்னோர் உரைத்திருக்க, அது போல் அவன் இல்லை..
என்னை போலவே மருத்துவமனை வரவேற்பரை மூலையில்; மிக சாதரணனாய் வீற்றிருந்தான்
உயிரை அவனிடத்திலிருந்து காப்பாற்ற விழையும் மருத்துவரிடம், எனக்கிருந்த மரியாதை பார்வைதன் அவனக்கும் அவர் மீது..
பிறந்த குழந்தைகளை நான் கவனிக்கும் அதே குதூகலம் அவனிடத்தும்..
இருந்தும் நான் தான் மரணம் என்றான்!
எங்கிருந்து நாம் வந்தோம் எங்கோ சென்றடைவதற்க்கு..? இந்த கேள்விக்கெல்லாம் விடை நானறியேன், மிக சாமன்யன் நான் என்றாய்..!!
இன்று உன்னோடு ஒடுங்கி செல்ல போகும் நபர் யார் என்றே நான் கேட்டேன்..
உடல் அறியாது, ஆனால் உயிர் என்னை அறிந்து வந்து இணைந்து கொள்ளும் நீ பார் என்றான்..
மரணத்திற்க்கு பெண் பால் இல்லை, எனென்றால், எந்த பெண்மையும் உயிரையும் உடலயும் பிரித்து பார்ப்பதில்லை..
வலிக்கு அப்பால்.. அவர்கள்.. அன்பு செலுத்தியே பழக்க பட்டவர்கள், அதனால், எங்களுக்குள் பெண் பால் இல்லை என்றான்!!
வலிக்கு தன்னை இழந்து படுத்திருக்கும் இந்த முதியவர உன் வேட்டை இன்று என்றேன், வெறுப்பு உமிழ..
பதிலேது அளிக்காது நகர்ந்து நின்றான், யாரயோ எதிர் பார்ப்பது போல்...
ஏனிப்படி..அழும் உறவு குரல்கள், உன்னை உலுக்காதா சொல் என்றேன் கெஞ்சும் குரலில்..
நீ யார், அந்த சாவித்ரி வம்சமோ சொல் என்றான்..? ஏளனம் மிகுந்த ஆனால் பொறுமையான குரலில்!
பெரும் வேதனையுடன் உயிர் எடுக்க மட்டுமே எனக்கு அனுமதி.. உயிரின் பின்/முன் நானறியேன்
நீ யார் என்றேன்.. மரணம் என்றான்.. சக்கரத்தின் கடைசி நுனி நான் என்றான்..
எது சக்கரத்தின் கடைசின் நுனி சொல் என்றேன்.. வினவிய வினா முடியும் முன்னர்
என்னை நகர்ந்து ;வேகமாய் விரைந்து சென்றான்.. அவனை துரத்தியபடி நான்..
9 ஆம் அடுக்கு மாடியின் ஜன்னல் திறந்து -என்னை நோக்கி புன்னகைத்தான்..
அய்யோ யாரோ போயினர் இவன் பின் என வேகமாய் அவனைக் நோக்கி தாவினேன் தடுக்கும் பொருட்டு..
அதிசயம்.. குருதி வடிய கண்டது என்னை நானே..
கை கோர்த்த வாறே.. எனை அழைத்து சென்றான் -தன் பெயர் மரணம் என்றான்..
என் உயிர் அவனை ஆலிங்கனம் செய்ய திகைத்த படி நான்!!
No comments:
Post a Comment