கத்தியில் வெட்டபடாமலே..உதிரம் சொட்டியது என்னுள்..
வேறென்ன, உன் வார்த்தையினாலே..
என் கோபம் உன்னை குதற.. கிழிந்து நின்றாய் நீயும்..
ஆதி மிருகங்களாய் நாம்!!ஒருவரை ஒருவர் கண்டு உறுமி நின்றோம்...
இது மறையும் என நம்புவோம்..
நான் உனை கண்டு குழைந்து, நீ என்னை கண்டு இழைந்து..
பின்னிய சரடுகளாய், களிக்கும் காலம் வரும்..
அதுவரை...
உன் புன்னகை பூக்கள் காணாத. மனம் பாலைவனமாய்..
உன் தோள் சாயா நான், அசோக வன சீதையாய்..
நீ அருகிலிருந்தும் உனக்காக ஏங்கி..அனலிலிட்டு வாட்டிய இலை கணக்காய்..
வேண்டாம் இனி இந்த அகந்தை கூடிய சண்டை..
எனக்கு நன்று வருவது உன்னை காதலிக்க மட்டுமே..
அது மட்டுமே என்னுடன் நின்று நமை காக்கட்டும்
No comments:
Post a Comment