Monday, November 19, 2012

சூப்பர் குழப்ப கவிதை...:-)

***********************************************************
ஒரு சொல்லில் கதை இருந்தது..

மற்றதெல்லாம் வெற்றிடம்.

கதைக்குள் கதையாய்,

சொல்லாத சொல்லாய் நான் மௌனம் பழகினேன்..

மௌனம் கரை உடைந்த கணமாய்..

கப்பலேறி வெகுதூர பிரயாணமாய்,

என் மனம் என்னை விட்டு எதோ தேடும்,

எதையோ நினைத்து பெருமூச்சு ஒன்று வெளி விடும்.

கூடு திரும்ப விரும்பா பறவை போல்,

பள்ளியிலிருந்து வீடு வரும் வழியை மட்டுமே மிக நேசிக்கும் சிறுமியாய்!! 

அமைதி அறியா கடலாய் அது கடக்கு மணித் துளிகளை.....!

காலம், காலமாய் சொல்லில் கதையாய்,

கதைக்குள் நானாய்,

கவிதை மட்டுமே தேடும் மனமாய்...

சங்கில் அடைபட்டு விடுதலை அடையா கடலாய்,

மனதிடம் மாட்டிய நான்

ஒரு நாள் இந்த சொல் உதிரும், நானும் வீழ்வேன்,

உறுதியான கணமாக.

காலத்தி கருப்பு பிரதேசத்தில் கரைந்து போகும் கருப்பாய்.. 

அது வரை, வெற்றிடம் விழ காத்திருக்கும் சொல்லாய் நான்!

எனக்குள்ளே கதை. கதைக்குள் கதையாய் , சொல்லாத சொல்லாய் நான்!!! 

நானே கதை, நானே சொல், நானே வெற்றிடம்,

நானே மனம் கருப்பும், வெற்றிடமும் இடம் மாறும் கணமும் நானே........

No comments: