டிசம்பர் 20 7:30 PM IST
இந்த ஆண்டின் கடைசியான பெரிய பொய்...
அம்மா செருப்பு அறுந்ததென்றாயே.. வாங்கலாமா? என்றேன்...
21-டிசம்பர் உலகம் அழியப்போகுதாமே... இருந்தா பாத்துக்கலாம் சும்மா இரு
என்றாள்... எல்லாம் அறிந்த இல்லத்தரசியாய்..
அப்பாடா, வீட்டுகடன் கட்டவேண்டாம், அசொசியேஷன் சண்டைகள் எதும் இல்லாமல்,
குடும்பமாய் மொத்தமாய் போயிரலாம் அப்படி
என்றார், என்னவர்.. எனக்கு பகீர் ரீயாக்ஷன் கொடுத்தபடி..
அறிவு ஆச்சர்யம் கொடுத்தான் பெரியவன், ஐயா ஹிந்தி படிக்கவே வேண்டாம் ஜாலி
என்று!!!
கொலிமி.. குலிமி.. என்று மழலையிலெயே, ஆனந்தம் பகர்ந்தாள் கடைகுட்டி என்னோடு..
கொஞ்சமும் ஆரவாரமின்றி.. டிசம்பர் 21 நகர்ந்தது...எதுவும் நிகழாமல்..!
ட்ராஃபிக் கண்டு சிடுசிடுக்கும் அன்பு கணவர்..
அலுவலகமும், அடுப்படியும், இடுப்பு குழந்தையும் அப்படியே அடம் பிடித்தது
எப்பவும் போல்..
அடா, இப்படியுமா நடக்கும்,.. என அலுத்தபடி...ஆனால், உள்ளூர
சந்தோஷித்தபடியே...இதோ உங்களோடு, இன்னுமோர் ஆண்டை, வரவேற்க்க என் கவிதை யெனும்
பேராயுதத்தோடு...
பொய் களைந்து.. நிஜம் தேடி என்னுடய புத்தாண்டு வாழ்த்து
கவிதை உங்கள் அனைவருக்கும்..
10 அன்பு கட்டளைகள்... முடிந்ததை டிக் செய்யவும், முடியாததை optional விடவும்....(யாருக்கு என்ன போச்சு?)..
1 கெட்டதை தேடி பரப்பும் செய்தி-தாளில், இனிமேலும், எங்காவது ஒர் நல்ல செய்தி தேடி படிப்பதை கொள்கையாய் கொள்க!
2. ½ மணி யாவது சரி, உமக்கே உமக்கென நேரம் ஒதுக்கி, சும்மா உட்கார்ந்தாலும் சரி அது உங்கள் நேரம் என கொடி பிடிக்க!!
3. தெரியாத யார் கண்ணில் பட்டாலும், நெஞ்சு கனிந்து..முகம் பூத்து,.. புன்னகை பொட்டலங்கள் வினியோகிக்க..
4. கடவுள் முன் கை கூப்பி, உலகம் நல்லபடியாய் இருக்க ஒரே ஒரு நிமஷம் பிரார்த்தனை செய்க..
5. முடிந்தவரை சுற்றுபுற சூழலை உங்கள் எதிர்கால தலைமுறைக்கென கருதி.. சுத்தம் பேண்க
6. வாரம் ஒரு முறையேனும்..காரின்றி, பேருந்து/இரு சக்கர/ஆட்டோ அலுவலகம் வந்து ட்ராஃபிக் அரக்கனை அடக்குக
7. காரில் செல்லும் எனது அருமை நண்பர் கனவான்கள்..மாதத்தில் ஒரே ஒரு நாள் no honking day கடை பிடிக்க
8. தினத்தில் எதாவது ஒரே ஒரு நேரம் ஒதுக்கி, குடும்பத்தோடு, கூடி உணவோ, அல்லது, ஒர் நல்ல நிகழ்ச்சியோ கண்டு களிக்க..
9. அலுவலகத்தில், காபி தரும் சீருடை ஊழியருக்கு, இனிய காலை வணக்குமும், கொடுத்த காபிக்கு தேங்க்ஸும் சொல்லி வியப்பிலாழ்த்துக..
10. வெள்ளிக்கிழமை மட்டுமல்லாது, திங்கள்கிழமைகளிலும், சந்தோஷ புன்னகை சிந்தி, எல்லோரையும் சந்தோஷத்தில் ஆழ்த்துக..
அடி போடி, அட்வைஸ் மழை வேண்டாம் எமக்கு என்பவர்களுக்கு, சின்ன கவிதை..
நாள் நகரும், நிமிரும், ஒடும்.. அவரவர் பார்வை படி..
இது இனிய ஆண்டாய் இருந்திருக்கும், கொஞ்சம் கவலையும், கொஞ்சம் நல்லதையும்
கலந்து நம்மை கலங்க அடித்திருக்கும்.
பாடம் சில கற்றிருப்போம், நிகழ்வுகள் சில பதிந்து இருக்கும் நெஞ்சில்..
சிலது, மங்கி நைந்து, போயிருக்கும்..
மாற்றங்கள் இன்றியமையாதது.. அது..நல்லதோ கெட்டதோ,
இதுவும் போய்விடும் பழைய ஏடாய் இன்னும் சில மணி துளிகளில்!!!
இருந்து இதுவரை பாடம் பகர்ந்த இந்த ஆண்டுக்கு விடை பகர்ந்து..
வரப்போகும் இன்னோர் ஆண்டு, அது நல்லதாகட்டும்,
கனவுகள் நிஜமாகட்டும், முயற்ச்சிகள் பலிக்கட்டும்
இறைவன் அருள் உங்களோடு என்றும் இருக்கட்டும்.. என்ற நம்பிக்கையோடு
நட்பு வட்டமே, என்னுடைய இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்!!!
No comments:
Post a Comment