Wednesday, January 2, 2013

புத்தாண்டு வாழ்த்துக்கள்! 2013

டிசம்பர் 20 7:30 PM IST
இந்த ஆண்டின் கடைசியான பெரிய பொய்...
அம்மா செருப்பு அறுந்ததென்றாயே.. வாங்கலாமா? என்றேன்...
21-டிசம்பர் உலகம் அழியப்போகுதாமே... இருந்தா பாத்துக்கலாம் சும்மா இரு என்றாள்... எல்லாம் அறிந்த இல்லத்தரசியாய்..
அப்பாடா, வீட்டுகடன் கட்டவேண்டாம், அசொசியேஷன் சண்டைகள் எதும் இல்லாமல், குடும்பமாய் மொத்தமாய் போயிரலாம்  அப்படி என்றார், என்னவர்.. எனக்கு பகீர் ரீயாக்ஷன் கொடுத்தபடி..
அறிவு ஆச்சர்யம் கொடுத்தான் பெரியவன், ஐயா ஹிந்தி படிக்கவே வேண்டாம் ஜாலி என்று!!!
கொலிமி.. குலிமி.. என்று மழலையிலெயே, ஆனந்தம் பகர்ந்தாள் கடைகுட்டி என்னோடு..
கொஞ்சமும் ஆரவாரமின்றி.. டிசம்பர் 21 நகர்ந்தது...எதுவும் நிகழாமல்..!
ட்ராஃபிக் கண்டு சிடுசிடுக்கும் அன்பு கணவர்..
அலுவலகமும், அடுப்படியும், இடுப்பு குழந்தையும் அப்படியே அடம் பிடித்தது எப்பவும் போல்..
அடா, இப்படியுமா நடக்கும்,.. என அலுத்தபடி...ஆனால், உள்ளூர சந்தோஷித்தபடியே...இதோ உங்களோடு, இன்னுமோர் ஆண்டை, வரவேற்க்க என் கவிதை யெனும் பேராயுதத்தோடு...
பொய் களைந்து.. நிஜம் தேடி என்னுடய புத்தாண்டு வாழ்த்து கவிதை உங்கள் அனைவருக்கும்..

10 அன்பு கட்டளைகள்... முடிந்ததை டிக் செய்யவும், முடியாததை optional     விடவும்....(யாருக்கு என்ன போச்சு?)..
1     கெட்டதை தேடி பரப்பும் செய்தி-தாளில், இனிமேலும், எங்காவது ஒர் நல்ல செய்தி தேடி படிப்பதை கொள்கையாய் கொள்க!
2.       ½ மணி யாவது சரி, உமக்கே உமக்கென நேரம் ஒதுக்கி, சும்மா உட்கார்ந்தாலும் சரி அது உங்கள் நேரம் என கொடி பிடிக்க!!
3.       தெரியாத யார் கண்ணில் பட்டாலும், நெஞ்சு கனிந்து..முகம் பூத்து,.. புன்னகை பொட்டலங்கள் வினியோகிக்க..
4.       கடவுள் முன் கை கூப்பி, உலகம் நல்லபடியாய் இருக்க ஒரே ஒரு நிமஷம் பிரார்த்தனை செய்க..
5.       முடிந்தவரை சுற்றுபுற சூழலை உங்கள் எதிர்கால தலைமுறைக்கென கருதி.. சுத்தம் பேண்க
6.       வாரம் ஒரு முறையேனும்..காரின்றி, பேருந்து/இரு சக்கர/ஆட்டோ அலுவலகம் வந்து ட்ராஃபிக் அரக்கனை அடக்குக
7.       காரில் செல்லும் எனது அருமை நண்பர் கனவான்கள்..மாதத்தில் ஒரே ஒரு நாள் no honking day  கடை பிடிக்க
8.       தினத்தில் எதாவது ஒரே ஒரு நேரம் ஒதுக்கி, குடும்பத்தோடு, கூடி உணவோ, அல்லது, ஒர் நல்ல நிகழ்ச்சியோ கண்டு களிக்க..
9.       அலுவலகத்தில், காபி தரும் சீருடை ஊழியருக்கு, இனிய காலை வணக்குமும், கொடுத்த காபிக்கு தேங்க்ஸும் சொல்லி வியப்பிலாழ்த்துக..
10.   வெள்ளிக்கிழமை மட்டுமல்லாது, திங்கள்கிழமைகளிலும், சந்தோஷ புன்னகை சிந்தி, எல்லோரையும் சந்தோஷத்தில் ஆழ்த்துக..

அடி போடி, அட்வைஸ் மழை வேண்டாம் எமக்கு என்பவர்களுக்கு, சின்ன கவிதை..

நாள் நகரும், நிமிரும், ஒடும்.. அவரவர் பார்வை படி..
இது இனிய ஆண்டாய் இருந்திருக்கும், கொஞ்சம் கவலையும், கொஞ்சம் நல்லதையும் கலந்து நம்மை கலங்க அடித்திருக்கும்.
பாடம் சில கற்றிருப்போம், நிகழ்வுகள் சில பதிந்து இருக்கும் நெஞ்சில்..
சிலது, மங்கி நைந்து, போயிருக்கும்..
மாற்றங்கள் இன்றியமையாதது.. அது..நல்லதோ கெட்டதோ,
இதுவும் போய்விடும் பழைய ஏடாய் இன்னும் சில மணி துளிகளில்!!!
இருந்து இதுவரை பாடம் பகர்ந்த இந்த ஆண்டுக்கு விடை பகர்ந்து..
வரப்போகும் இன்னோர் ஆண்டு, அது நல்லதாகட்டும்,
கனவுகள் நிஜமாகட்டும், முயற்ச்சிகள் பலிக்கட்டும்
இறைவன் அருள் உங்களோடு என்றும் இருக்கட்டும்.. என்ற நம்பிக்கையோடு
நட்பு வட்டமே, என்னுடைய இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்!!!

Monday, November 19, 2012

சூப்பர் குழப்ப கவிதை...:-)

***********************************************************
ஒரு சொல்லில் கதை இருந்தது..

மற்றதெல்லாம் வெற்றிடம்.

கதைக்குள் கதையாய்,

சொல்லாத சொல்லாய் நான் மௌனம் பழகினேன்..

மௌனம் கரை உடைந்த கணமாய்..

கப்பலேறி வெகுதூர பிரயாணமாய்,

என் மனம் என்னை விட்டு எதோ தேடும்,

எதையோ நினைத்து பெருமூச்சு ஒன்று வெளி விடும்.

கூடு திரும்ப விரும்பா பறவை போல்,

பள்ளியிலிருந்து வீடு வரும் வழியை மட்டுமே மிக நேசிக்கும் சிறுமியாய்!! 

அமைதி அறியா கடலாய் அது கடக்கு மணித் துளிகளை.....!

காலம், காலமாய் சொல்லில் கதையாய்,

கதைக்குள் நானாய்,

கவிதை மட்டுமே தேடும் மனமாய்...

சங்கில் அடைபட்டு விடுதலை அடையா கடலாய்,

மனதிடம் மாட்டிய நான்

ஒரு நாள் இந்த சொல் உதிரும், நானும் வீழ்வேன்,

உறுதியான கணமாக.

காலத்தி கருப்பு பிரதேசத்தில் கரைந்து போகும் கருப்பாய்.. 

அது வரை, வெற்றிடம் விழ காத்திருக்கும் சொல்லாய் நான்!

எனக்குள்ளே கதை. கதைக்குள் கதையாய் , சொல்லாத சொல்லாய் நான்!!! 

நானே கதை, நானே சொல், நானே வெற்றிடம்,

நானே மனம் கருப்பும், வெற்றிடமும் இடம் மாறும் கணமும் நானே........

Thursday, March 3, 2011

உன்னோடு கோபம்

கத்தியில் வெட்டபடாமலே..உதிரம் சொட்டியது என்னுள்..
வேறென்ன, உன் வார்த்தையினாலே..
என் கோபம் உன்னை குதற.. கிழிந்து நின்றாய் நீயும்..

ஆதி மிருகங்களாய் நாம்!!ஒருவரை ஒருவர் கண்டு உறுமி நின்றோம்...

இது மறையும் என நம்புவோம்..
நான் உனை கண்டு குழைந்து, நீ என்னை கண்டு இழைந்து..
பின்னிய சரடுகளாய், களிக்கும் காலம் வரும்..
அதுவரை...

உன் புன்னகை பூக்கள் காணாத. மனம் பாலைவனமாய்..
உன் தோள் சாயா நான், அசோக வன சீதையாய்..
நீ அருகிலிருந்தும் உனக்காக ஏங்கி..அனலிலிட்டு வாட்டிய இலை கணக்காய்..

வேண்டாம் இனி இந்த அகந்தை கூடிய சண்டை..
எனக்கு நன்று வருவது உன்னை காதலிக்க மட்டுமே..
அது மட்டுமே என்னுடன் நின்று நமை காக்கட்டும்

Monday, February 7, 2011

மரணம்

நீ யாரென நான் வினவினேன்..
மரணம் என்றான்
பயங்கரமான இருளாய் இருப்பானென்று எண்ணினேன்..
கோரமான முகம் அவனதென்று என் முன்னோர் உரைத்திருக்க, அது போல் அவன் இல்லை..

என்னை போலவே மருத்துவமனை வரவேற்பரை மூலையில்; மிக சாதரணனாய் வீற்றிருந்தான்
உயிரை அவனிடத்திலிருந்து காப்பாற்ற விழையும் மருத்துவரிடம், எனக்கிருந்த மரியாதை பார்வைதன் அவனக்கும் அவர் மீது..
பிறந்த குழந்தைகளை நான் கவனிக்கும் அதே குதூகலம் அவனிடத்தும்..
இருந்தும் நான் தான் மரணம் என்றான்!

எங்கிருந்து நாம் வந்தோம் எங்கோ சென்றடைவதற்க்கு..? இந்த கேள்விக்கெல்லாம் விடை நானறியேன், மிக சாமன்யன் நான் என்றாய்..!!
இன்று உன்னோடு ஒடுங்கி செல்ல போகும் நபர் யார் என்றே நான் கேட்டேன்..
உடல் அறியாது, ஆனால் உயிர் என்னை அறிந்து வந்து இணைந்து கொள்ளும் நீ பார் என்றான்..

மரணத்திற்க்கு பெண் பால் இல்லை, எனென்றால், எந்த பெண்மையும் உயிரையும் உடலயும் பிரித்து பார்ப்பதில்லை..
வலிக்கு அப்பால்.. அவர்கள்.. அன்பு செலுத்தியே பழக்க பட்டவர்கள், அதனால், எங்களுக்குள் பெண் பால் இல்லை என்றான்!!

வலிக்கு தன்னை இழந்து படுத்திருக்கும் இந்த முதியவர உன் வேட்டை இன்று என்றேன், வெறுப்பு உமிழ..
பதிலேது அளிக்காது நகர்ந்து நின்றான், யாரயோ எதிர் பார்ப்பது போல்...
ஏனிப்படி..அழும் உறவு குரல்கள், உன்னை உலுக்காதா சொல் என்றேன் கெஞ்சும் குரலில்..

நீ யார், அந்த சாவித்ரி வம்சமோ சொல் என்றான்..? ஏளனம் மிகுந்த ஆனால் பொறுமையான குரலில்!
பெரும் வேதனையுடன் உயிர் எடுக்க மட்டுமே எனக்கு அனுமதி.. உயிரின் பின்/முன் நானறியேன்

நீ யார் என்றேன்.. மரணம் என்றான்.. சக்கரத்தின் கடைசி நுனி நான் என்றான்..
எது சக்கரத்தின் கடைசின் நுனி சொல் என்றேன்.. வினவிய வினா முடியும் முன்னர்
என்னை நகர்ந்து ;வேகமாய் விரைந்து சென்றான்.. அவனை துரத்தியபடி நான்..

9 ஆம் அடுக்கு மாடியின் ஜன்னல் திறந்து -என்னை நோக்கி புன்னகைத்தான்..
அய்யோ யாரோ போயினர் இவன் பின் என வேகமாய் அவனைக் நோக்கி தாவினேன் தடுக்கும் பொருட்டு..

அதிசயம்.. குருதி வடிய கண்டது என்னை நானே..
கை கோர்த்த வாறே.. எனை அழைத்து சென்றான் -தன் பெயர் மரணம் என்றான்..
என் உயிர் அவனை ஆலிங்கனம் செய்ய திகைத்த படி நான்!!

Monday, January 17, 2011

குழந்தையின் ஜூரம்

ஒட்டடை அடித்தபடி.. phantom..
இவனுடன்.. crayons கிறுக்கியபடி..superman
comics படிக்கும், batman..
game boy விளையாட அடம் பிடிக்கும் பால அனுமன் என..
இப்படி கலவையாய் இருந்தது..
ஜூரத்தில்.. சுருண்டு உறங்கும் என் மகனின் அறையும் அவனது கற்பனைகளும்..

இதில் அம்மாவிற்க்கு இடமெங்க்கே என்ற என் கேள்விக்கு... ஜுரத்திலும் சுரம் தப்பாமல் வந்த பதில்..

நீதான் office- இருப்பியே.. நீ என் கூட்டம் தவிர்!! என்று சொல்லாலே பொட்டென்று அடித்தான்.. அருமை மகன்.

பொங்கின கண்கள்.. பயலின் வலியொடு என் வலி கூடி..
இங்கிதம் அறிந்து... என் பார்வை தவிர்த்தனர் கதை நாயகர்கள் அனைவரும்

இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்!!!

வருகை தராத விருந்தாளி வந்தது போல் ஆரவாரத்தோடு, வாழ்த்துக்களோடு, நுழைந்து..
கனவுகள் கோடி கண்ணில் தூவி.. அப்புறம், ..சிறிது சிறிதாக,
நீர் குமிழியாய்..நாட்கள் சிதறி...எண்ண குவியலோடு, அங்கும் இங்கும் கரைந்து.,

நியாபகங்களாய் சில தினங்கள் மட்டுமே தேறும்!
சிலது செல்லா காசுகள்.. சிலது, அடித்தது அதிர்ஷ்டம் என எண்ணவைக்கும் பொற்காசுகள்..
இப்படி இந்த வருடம் நம் நெஞ்சில் நாள் குருத்து விட்டு நின்றிருக்கும்!

புதியது களைந்து பழயது ஆகி, மறுபடி புதியது வந்து,
இது ஒர் அலுக்காத கால சக்கரம்தான்!
எல்ல புது வருடங்களும் இப்படித்தான், பிரிக்காத பரிசு பொருளாய் வந்து,
கடைசியில் பழகிய பழந்துணியாய்,.மனதுக்கு நெருங்கிய நண்பனாய் ,
நின்றுவிடும் மனதோடு என்றும்!

கடந்து போகும் எல்லா வருடங்களும் ...
தான் நடந்து, நம்மை வளர்த்தி கொடுத்து;
நின்று கொள்ளும் ஓரு யோகியை போல்.!

சிலுவை சுமந்த யேசுவாய்... வாழ்க்கை சுமந்து நடக்கும் மாந்தர் கடந்து.,
நாள் முட்கள் கொஞ்சமே கொஞ்சம் ஒடித்து போட்டு, சந்தோஷ பையில் முகம் புதைத்து,
ஒரு நாள் நிமிர்ந்து பார்த்தால், நமக்கு புரியுமோ என்னவோ,
சுமந்தது சிலுவை அல்ல, நாமே நம்மைத்தான் சுமந்தோம் என்று!!!

நட்பு வட்டமே.. .
இந்த வருடம், உங்களுக்கு தென்றல் வீசியதா, புயல் பரிந்தளித்ததா என நானறியேன்!
எல்லா ஆண்டுகள் போல இதுவும் உங்களை உங்களாக மட்டுமே விட்டிருக்கும் என,
உங்கள் நிஜங்கள், உங்கள் கனவுகள் உங்களை என்றுமே அன்புடன் அரவணைத்திருக்கும் என நம்புகிறேன்...!

வரும் புத்தாண்டில், ஒரு நாள் போல் எல்லா நாளும்...
நாம் குழந்தைகள் போல்,
பொய்யற்று, கபடற்று, கவலைகள் ஏதும் அற்று., வாழ கந்தன் அருள் இருக்கட்டும்!!!

அகராதி விட்டு அழியும் ஆரோக்கிய குறைபாடுகள்..
சிறிய அளவில் கடன்,..பெரிய அளவில் வரவு!
வானம் தொடும் நம்பிக்கைகள்.., கேணி வற்றா வாய்ப்புகள் ..
.பூஜ்ஜியம் நோக்கி சரியும் கவலைகள், நிஜமாகும் நல்ல கனவுகள்.
புன்னகை நுரைக்கும் மகிழ்ச்சி தருணங்கள்..
கை கோர்த்து நடக்க நல்ல நட்பு மற்றும் உறவுகள்..

இதெல்லாம் கிடைக்க பெற எனது இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்!!!