Wednesday, June 16, 2010

கதை சொல்லி

கதை சொல்லி நான்,
ஊர் ஊராய் ஊர்ந்து சென்று, கதை விற்று கதை பெற்று வருவேன்....

ஆல மர வேராய் சில கதைகள், அடி மன ஆழத்தில் பாயும்...
சிதறி கிடக்கும் முகில்களுக்கு சிக்கெடுக்கும் தென்றலாய் சிலது...

கடலோடியும் திரவியம் தேடு என்ற மூத்தார் வாக்கிற்க்கு இணங்க...
கதை தேடி நடக்கிறேன்..

ஊர் வெளியே, விரைந்தோடும் நதி வழியே...
வெள்ளை/நீலம் என நிறம் மாறும் வான வெளியே...
என்னை நீவிர் காணலாம்...
கதைக்கலாம்... கண் பனிக்க விடை பெற்று, நெஞ்சினிலே இருத்தலாம்..

வாருங்கள், விதைத்தபடி செல்வோம்... கதைகளை,
உயிர் காற்று விற்ப்போம், அன்பு பரிமாற்றத்தில்...

நீர், நான் எல்லாம் அழிந்த பின்பும்... செல்லரிக்காத நினைவுகளாய்
நம்முடய சில கதை பதிப்புகளை...

எழுதுவதே நியாயமாய், நெருப்பாய்/நிஜமாய் வளர்ப்போம் கதைகளை...
கனவுகள் பரிமாறும்..காதல் சொல்லும், கவிதை சொல்லும் கதைகளை...

கை கோர்க்க நான் .. கதை சொல்ல நீங்கள்... இனியென்ன..
கதை சொல்லி நான்...

No comments: